Posts

கோப்பையை பருகும் தேநீர்

    வான்கூவர் நகரம் ஒன்றில் ரயில் நிலையம் ஒன்றுண்டு. மரக்கட்டைகளினால் ஆன அதன் நடைமேடையில் முன்பொருமுறை நானும் அம்மாவும் ரயிலுக்காக காத்திருந்தோம். அங்கு வைத்துதான் அம்மாவின் தம்பி இறந்து போனதை யாரோ வந்து அம்மாவிடம் கூறினார்கள் கன்னங்களைத் தாண்டி கால் விரல்களில் கண்ணீர் துளிகள் விழுந்த பிறகும் அம்மா அந்த நடைமேடையிலேயே நின்று கொண்டிருந்தார். உலகம் என்பது அணுக்களால் ஆனது  நாம் ஒரு மேசையைத் தொடுகிற பொழுது அந்த மேசையும் நம்மைத் தொடுவது  உண்மையானால் அந்த நடைமேடையில் அம்மாவின் அணுக்களும் கலந்திருக்கும். நான் போய் அந்த நடைமேடையில் அம்மா நின்ற  இடத்தில் நிற்க போகிறேன். நீண்ட நேரம், மிக நீண்ட நேரம் கன்னங்களைத் தாண்டி கால்விரல்களில் கண்ணீர் துளிகள் விழுந்த பிறகும் .                           -நான்சி வில்லியர்ட்  உறவுகளின்றி திரியும் உயிர்கள் எப்படி இருக்கும் கடிதங்களின்றி வெறுமென கிடக்கும் தபால் பெட்டியைப்போல,மரமென்னும்  உயிரைத் தாங்க உறவுகள் எனும்  வேர்கள் கிடக்கின்றன. ஒருநாள் சென்ட்ரல் சுரங்கப்பாதையில் ஒரு அம்மா அதன் படிக்கட்டுகளில

திருப்பி அடிப்பேன் - சீமான் - புத்தக விமர்சனம்

Image
படைப்பு: :  பா.சண்முகம் சொரணை உள்ள ஒவ்வொரு தமிழனும் படிக்க வேண்டிய புத்தகம்! திருப்பி அடிப்பேன். ஈழத்தில் நடந்த இனப் படுகொலையையும் ,தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதையும் ஆழமாய் சித்தரிக்கிறது புத்தகம் ! இந்த நூலில், ஈழப் பிரச்னை மட்டுமல்லாமல், பொதுவான அரசியல், வாக்குச் சுதந்திரம், மொழிப்பற்று, இளைஞர்களின் பங்களிப்பு என சமூக மாற்றத்துக்கான தேவைகளை, சீமான் வலியுறுத்தி இருக்கும்விதம் அசாத்தியமானது. ஒவ்வொரு கட்டுரையையும் படித்துவிட்டு, ‘களத்துக்கு வரத் தயார்!’ என தமிழகம் முழுக்க எழும்பிய தன்னெழுச்சியே, சமூக மாற்றத்துக்கான சாட்சி! சீமான் அவர்கள் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் ஐந்து மாதங்கள் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது அவர் சிறையிலிருந்துகொண்டே எழுதிய தொடரினை விகடன் பிரசுரம் புத்தகமாய் வெளியிட்டு இருக்கிறது . ஈழத்தில் தலைவர் பிரபாகரனும், அவரோடு சேர்ந்து போராடிய முகம் தெரியா மனிதர்களையும் தமிழக முன்னாள் முதல்வர் திரு. எம். ஜி.ராமச்சந்திரன் அவர்களின் பங்களிப்பும் இதுவரை தெரியாத புதுப்புது தகவல்களும் இடம் பெற்றிருக்கின்றன ' வெறும் நூற்றி பதி

வேட்டை

Image
வேம்புளியூர் மயானம் இரவு நிசப்தமாய்  இருந்தது. புதியதாய் இறந்த பிணங்கள் மட்டும் லேசாய் புகைந்து கொண்டிருந்தன. தோற்றம் சரியாய் தெரியவில்லை. மறைவு மட்டும் தெரிந்தது. மூர்த்தி -18.07.2009 மின்னல் வெளிச்சம் ஒன்றில் இந்த தேதி துல்லியமாய் தெரிந்தது .மழை வர காத்துகொண்டிருக்கும் மேகங்கள் மின்னிக்கொண்டே இருந்தன. உஷ்..எனும் சத்தத்தோடு மரங்கள் விசும்பி கொண்டிருந்தது.. லேசாய் முனகல் சத்தம் கேட்டது அந்த சமாதியில்........ மூச்சு விடும் சத்தம்... மூர்த்தி இறப்பதற்கு சில நாட்கள்  முன்பு!!!! டேய் மூர்த்தி நீதான் இதுக்கு சரியானவன் 'ஹ்ம்ம் ஏறு கீழே குதிடா டேய்!! என்ன விட்டுடுங்கடா நாம ஏதோ சின்ன சின்ன திருட்டு பண்ணிட்டு இருந்தோம் ''கோவில நகை கொள்ளை அடிக்கிறது பாவம் டா'' நான் போக மாட்டேன் .. சே ''அப்படியே'' அரைஞ்சேன்னு வச்சிக்கோ மவனே கீழே  குதிச்சி ஓடி போய்டு''. மூர்த்தி காத்திருக்க சங்கரும் ரவியும் நகைகளை திருடி வந்து விட்டனர். பல கோடி மதிப்பிருக்கும் அந்த நகைகளுக்கு பின்னே!! நாவலூர் சிவன் கோயில் னா சும்மாவா ? மூர்த்தி பயத்தில் நடுங்க டேய் என்ன

இது காதல் விளையாடும் தெரு(சிறு கதை )

Image
வசந்த காலம் வந்துவிட்டதை குயில் கூவி தெரிவித்தது. வானம் மேக மூட்டத்துடன்  இருக்க, சூரியன்  பூமியில் பட அவசரபட்டு கொண்டிருந்தான். பிரவீன், டேய்... பிரவீன் !! எழுந்திருடா விடிஞ்சாச்சு!!. அம்மா குரல் கேட்டு கண்விழித்தான் பிரவீன். சோம்பல் முறித்து பிரஷ் யையும் பேஸ்டையும் எடுத்துகிட்டு வெளியே வந்தான். சூரிய  கதிர் கொஞ்சம் கொஞ்சமாக பூமியில் பிரசன்னமாகி கொண்டிருந்தது. சாலையில் சிறு சிறு சத்ததோடு மக்கள் நடமாடிகொண்டிருந்தனர். பேப்பர் போடும் சிறுவனின் சைக்கிள் பெல் சத்தம், இட்லி மாவு விற்பவரின் குரல், நடுவே வர்ஷா கல்லூரிக்கு போறதையும்  பார்த்தான். இந்த இடத்தில் ''வர்ஷா''வை பற்றி. "வானத்திலிருந்து விழுந்த நட்சத்திரம் போல் வர்ஷா அவ்ளோ அழகு". இன்னும் சினிமா காரர்கள் யாரும் பாக்கலை, பார்த்திருந்தால்... ''ஏலம் எடுத்து நடிக்க வச்சிருபாங்க வர்ஷாவை''. இரண்டு  பேரும் ஒரே ஏரியா என்பதால் அடிக்கடி சந்தித்து கொள்வார்கள். வர்ஷா தூரத்துல வந்தாலே நம்மாளு நண்பரை யாரும் பக்கத்துல சேர்க்காம  தனியா வருவான். ரெண்டு பேரும் ஓரக் கண்ணால பார்த்துட்டு போய்டுவாங

மரணமும் அதற்க்கு மேலும் .......

Image
இங்க இறந்து கிடக்கிறது நான் தான் .நான் எப்பவும் போலத்தான் இருந்தேன் , ஆனா எல்லாரும் சொல்றாங்க நான் செத்துடேனாம். நான் சாகுற வரைக்கும் எனக்கு தெரியாது மரணம் எப்படி இருக்குமென்று , இறந்தவன் நான் சொல்றேன்  நீங்க தெரிஞ்சுகங்க! அது ஒரு மணம்,அமைதியான வெண்மை நிறம் , அதிக  ஒளி, சத்தமில்லாதது , கடலில் நீச்சல் அடித்துவிட்டு இரவில் தூங்கும் போது வரும் பிரம்மை போல் இருக்கும் , இல்லாத ராட்டினத்தில் சுற்றுவது போல.  எனக்கு தெரியாது இவ்வளவு சீக்கிரம் நான் இறப்பேன் என்று , என் கைபேசிக்கு புதுசா வந்திருந்த குறுந்தகவல் யாருடையது என்று கேட்கலாம் என பதில் அனுப்பி இருந்தேன்,  நீங்க யாரு?இன்னும் பதில் வரலை அவர்களிடமிருந்து , பதில் வந்தாலும் இனி என்னால அது யாரென்று  தெரிஞ்சிக்க முடியாது. நான் கிழே விழுந்து கிடக்கும் போது என் கைபேசியை எடுத்து  ஒருவர் எனக்கு தெரிந்தவரை  அழைக்க பார்த்தார், நானும் தான் அவர்க்கு உதவுனேன் அவர்க்கு அது காதில் விழலை,  அண்ணே ..அதுல நம்பர் ரெண்டை அழுத்தி கால் பட்டன் கொடுங்க என் அண்ணன் பேரை ஸ்பீட் டயல் வச்சிருக்கேன்!! இந்த மாதிரி மூணு முறை சொன்னேன் , அவருக்கு அது

கண்ணாடி நாட்கள் (சிறு கதை )

Image
ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தின் மேல் போய்கொண்டிருந்தது அந்த ரயில். ஜன்னலோரத்தில் சோகமாய் உட்கார்த்திருந்தான் செழியன். ஜன்னலுக்கு வெளியே வாணிபத்திற்காக சில கப்பல்கள் மிதந்து கொண்டிருந்தன. அவனுக்கு எதிரே ஒரு குடும்பமும் பயணித்து கொண்டிருந்தது. அவன் அருகில் இருந்த பெரியவர் ஒருவர் வாயில் வெற்றிலையை குதப்பியவாறே பேச ஆரம்பித்தார், "என்ன தம்பி! ரொம்ப சோகமா இருக்கீங்க!!," ஏதாவது பிரச்சனையா? சொல்லுங்க தம்பி''. எனக்கு சாமுத்திரிகா லக்ஷணம் தெரியும், உங்களைப் பார்த்தா பெருசா எதையோ இழந்த மாதிரி தெரியுது. அதான் கேட்டேன்.” மெல்ல பேச ஆரம்பித்தான் செழியன், "ஆமாங்கையா யாருக்கும் வராத பிரச்சனை எனக்கு வந்திருக்கு". ”என்ன தம்பி சொல்றீங்க...? என்னாச்சு கொஞ்சம் புரியுற மாதிரி சொல்லுங்களேன்.” இருக்கையில் கொஞ்சம் நிமிர்ந்து உட்கார ஆரம்பித்து,"என் பேரு செழியன், சென்னை தான் சொந்த ஊரு, நானும் யாழினியும் காதலிச்சி கல்யாணம் பண்ணிகிட்டோம். கோவிலை கடக்கும் போது எதேச்சையா  நம்ம கை நெஞ்சுக்கும் உதட்டுக்கும் போகும்ல அந்த மாதிரிதான் யாழினி கிட்ட எதேச்சையா என் காதலை சொன்னேன்” எ

விட்டில் பூச்சி(சிறுகதை)

                                     அதிகாலை தென்னங்கீற்றுக்களின் இடைவெளியில் சூரியன் எட்டி பார்த்துகொண்டிருந்தான். கடிகாரத்தில் நேரம் சரியாய் 6.40யை கடந்திருந்தது.  "சரி... என்னப்பா? ஆளாளுக்கு ஒருத்தர் வாயை ஒருத்தர் பார்த்துகிட்டு இருக்கீங்க. சட்டு புட்டுன்னு ஆக வேண்டிய காரியத்தை பாருங்கப்பா!!" கூட்டத்தில் இருந்த முருகேசன் தன் கையில் வைத்திருந்த துண்டை உதறியவாரே சொல்லி முடித்தார்.  "அண்ணே! உங்களுக்கே தெரியும், மூத்த புள்ள நான் இப்படி குத்து கல்லுமாதிரி இருக்கும் போது என்னைய விட இளையவன் சுடலை அவனுக்கு சொத்துல அதிகமா எழுதி வச்சா என்ன அர்த்தம் ?" சத்தமாக சொல்லி முடித்தான் முத்தையா  "அது சரி... முத்தையா உங்க அப்பா நல்ல சிவம் ஊர்ல எவ்ளோ பெரிய மனுஷன், இப்ப அவர் இருக்குற நிலையில நீ இப்படி பேசுனா அவர் மனசு எவ்ளோ பாடுபடும்."  சுவரின் மூலையில் சோகமாக அமர்ந்திருந்தான் சுடலை. நல்ல சிவம் கட்டிலில் பேச்சு மூச்சின்றி கிடந்தார். புதியதாய் பிறந்த விட்டில் பூச்சி ஒன்று அவரை சுத்தி சுத்தி வந்துகொண்டிருந்தது. நல்ல சிவம் வாயில் ஊற்றப்பட்ட பால் வாசனை அந்த அறை முழுவத