பொம்மைகள் இல்லாத உலகம்...!
பொம்மைகள்... ஒண்ணு சிரிச்சிட்டு இருக்கும். இல்லைனா வெச்ச இடத்துல இருந்து அசையாம இருக்கும். மழை, வெயில், காத்து எதப் பத்தியும் கவலைப்படாது....! சின்ன வயசுல பொம்மைகள் பத்தி அப்படிஒண்ணும் ஆர்வம் இருக்கல. ஆனா, வயசு அதிகமானப்புறம் தான் தெரிஞ்சது பொம்மைகள் இல்லாத உலகத்தில் நம்மால வாழமுடியாதுன்னு. அக்காவும், தங்கையும் மரப்பாச்சி பொம்மைகளோட தான் தங்களோட சின்ன வயச கழிச்சாங்க. அது எங்கம்மா விளையாடுன பொம்மையாம். பின்னாளில தங்களோட பிள்ளைகளுக்கு சீதனமா கொடுத்தாலும் ஆச்சர்யப் படமுடியாது. இன்னிக்கு நகரத்துல பொம்மைகள் இல்லாத வீடுகளும் சரி, பொம்மைகளை விற்காத கடைகளும் சரி இல்லைன்னு சொல்ல முடியாது. பொம்மைகள் அந்த அளவிற்கு தன்னோட சுட்டு விரலை நம்மை நோக்கி நீட்டி இருக்கு போல. தலை உடைஞ்சுபோன ஒரு புத்தர் பொம்மையோட வீட்டுக்கு வந்த தம்பி அது ஒரு அதிசய பொருளாகவே ரொம்ப நாளுக்கு வெச்சிருந்தான். அவனுக்கு வெவரம் தெரிஞ்சப்ப சிரிக்கும் புத்தர் சிலையை அதிஷ்டத்திர்கான அறிகுறியாய் மாறிபோயிருந்ததை அப்பாவும், அம்மாவும் ஏத்துகிட்டு இருந்தாங்க .. சிங்கப்பூரில் ...