திருப்பி அடிப்பேன் - சீமான் - புத்தக விமர்சனம்
படைப்பு: : பா.சண்முகம் சொரணை உள்ள ஒவ்வொரு தமிழனும் படிக்க வேண்டிய புத்தகம்! திருப்பி அடிப்பேன். ஈழத்தில் நடந்த இனப் படுகொலையையும் ,தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதையும் ஆழமாய் சித்தரிக்கிறது புத்தகம் ! இந்த நூலில், ஈழப் பிரச்னை மட்டுமல்லாமல், பொதுவான அரசியல், வாக்குச் சுதந்திரம், மொழிப்பற்று, இளைஞர்களின் பங்களிப்பு என சமூக மாற்றத்துக்கான தேவைகளை, சீமான் வலியுறுத்தி இருக்கும்விதம் அசாத்தியமானது. ஒவ்வொரு கட்டுரையையும் படித்துவிட்டு, ‘களத்துக்கு வரத் தயார்!’ என தமிழகம் முழுக்க எழும்பிய தன்னெழுச்சியே, சமூக மாற்றத்துக்கான சாட்சி! சீமான் அவர்கள் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் ஐந்து மாதங்கள் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது அவர் சிறையிலிருந்துகொண்டே எழுதிய தொடரினை விகடன் பிரசுரம் புத்தகமாய் வெளியிட்டு இருக்கிறது . ஈழத்தில் தலைவர் பிரபாகரனும், அவரோடு சேர்ந்து போராடிய முகம் தெரியா மனிதர்களையும் தமிழக முன்னாள் முதல்வர் திரு. எம். ஜி.ராமச்சந்திரன் அவர்களின் பங்களிப்பும் இதுவரை தெரியாத புதுப்புது தகவல்களும் இடம் பெற்றிருக்கின்றன ' வெறும் நூற்றி பதி...