அமன்யா -சிறுகதை
அந்த தார் சாலையின் ஓரத்தில் இருந்த மின்விளக்குகளில் சில எடிசனுக்கு நன்றி சொல்லி கொண்டும் ஒரு சிலவிளக்குகள் அப்பகுதி மின்வாரிய ஊழியர்களிடம் கோபித்து கொண்டும் இருந்தன ..'' ஆரஞ்சு வண்ணத்தை சாலை முழுவதும் படர விட்டிருந்த அவை எல்லாம் நேரம் மாலை ஏழு மணி என்பதை தெளிவாய் காட்டியது .. கதிர்க்கு வெள்ளைகாரங்க வகுத்த மர்பி விதிகள் ங்கற துரதிஷ்டம் நிழல் போல கூடவே இருக்கும் ,பஸ் ஸ்டான்ட் ல நின்னா எதிர் பக்கத்துல பஸ் வரதும் ,அந்த பக்கம் நின்னா இந்த பக்கம் பஸ் வரதும் பழகிடுச்சி ,அதனால் தான் கடன் வாங்கி இந்த பல்சர வாங்கி இருக்கான் அதுவும் போகும் போது ஒழுங்கா போயிட்டு வீட்டுக்கு வரும் போது பஞ்சர் ஆகிடுச்சி ..அத ஓரம் கட்டிட்டு தான் வீட்டுக்குள்ள வந்தான் கதிர் . வழக்கம் போல அம்மா லட்சுமி காபி போட்டு கொடுக்க அதை குடிச்சிட்டு ரெஸ்ட் எடுத்துகிட்டான். (கதிர் சென்னைல இந்துஜா குரூப் ங்கற கம்பெனி ல புதுசா ஜாயின் பண்ணி இருக்கான் ) பொழுது போக்குனு எதுவும் இல்லை இவனுக்கு ..ஆனா தினமும் காலைல எட்டரை மணிக்கு இவன் லவ் பண்றதா நினைச்சிகிட்டு இருக்குற அந்த அமன்யா பொண்ணுதான்...