Posts

Showing posts from 2010

அமன்யா -சிறுகதை

Image
அந்த தார் சாலையின் ஓரத்தில் இருந்த மின்விளக்குகளில் சில எடிசனுக்கு நன்றி சொல்லி கொண்டும் ஒரு சிலவிளக்குகள் அப்பகுதி மின்வாரிய ஊழியர்களிடம் கோபித்து கொண்டும் இருந்தன ..'' ஆரஞ்சு வண்ணத்தை சாலை முழுவதும் படர விட்டிருந்த  அவை எல்லாம் நேரம் மாலை ஏழு மணி என்பதை தெளிவாய் காட்டியது .. கதிர்க்கு வெள்ளைகாரங்க வகுத்த மர்பி விதிகள் ங்கற துரதிஷ்டம் நிழல் போல கூடவே இருக்கும் ,பஸ் ஸ்டான்ட் ல நின்னா எதிர் பக்கத்துல பஸ் வரதும் ,அந்த பக்கம் நின்னா இந்த பக்கம் பஸ் வரதும் பழகிடுச்சி ,அதனால் தான் கடன் வாங்கி இந்த பல்சர வாங்கி இருக்கான் அதுவும் போகும் போது ஒழுங்கா போயிட்டு வீட்டுக்கு வரும் போது பஞ்சர் ஆகிடுச்சி ..அத ஓரம் கட்டிட்டு தான் வீட்டுக்குள்ள வந்தான் கதிர் . வழக்கம் போல அம்மா லட்சுமி காபி போட்டு கொடுக்க அதை குடிச்சிட்டு  ரெஸ்ட் எடுத்துகிட்டான். (கதிர் சென்னைல இந்துஜா குரூப் ங்கற கம்பெனி ல புதுசா ஜாயின் பண்ணி இருக்கான் ) பொழுது போக்குனு எதுவும் இல்லை இவனுக்கு ..ஆனா தினமும் காலைல எட்டரை மணிக்கு இவன் லவ் பண்றதா நினைச்சிகிட்டு இருக்குற அந்த அமன்யா பொண்ணுதான்...

அகம்புறம்

        நன்றி ஆனந்த விகடன் இதழ் -12.03.2008                              அகம்புறம் .                                          வண்ணதாசன் . ஆறு 'பி 'இல் இருந்து ஏழு 'பி 'க்கு போனேன் .ஜான்சன் சார்.ஜான்சன் சாமுவேல் என்பது முழுபெயர் . ஹோம் வொர்க் என்று ஒன்று எல்லோருக்கும் கொடுப்பார்கள் .அதில் தான் பரமண்டல ஜெபம்இருக்கும் .ஹை ஸ்கூலில் இருந்து ஆறாம் கிளாஸ் வரை ஆசிரியர் யார் யார் ,பெயர்   இன்னின்ன.எப்போது கால் பரீட்சை என்றைக்கு லீவு என்பதல்லாம் அதிலிருந்து மட்டுமே தெரியும் . ஜான்சன் சார்வா பற்றி ஏகப்பட்ட கதைகள் உண்டு .அவர் கோட்டு பைக்குள் எப்போதும் அல்வா வைத்திருப்பார் என்றும் ,கைகுட்டையால் முகம் துடைப்பது மாதிரி யாருக்கும் தெரியாமல் அல...

உறவுகள் (சிறுகதை )

                                                           சூரியன் அதிகாலையில் பூமியை எட்டிப்பார்க்க அவசரபட்டுகொண்டிருந்தான் . ஜீவா ,தம்பி ஜீவா ''எதிர் வீட்டிலிருந்து மாமி குரல் கேட்டு ஜீவா கண்விழித்தான் . ''என்ன மாமி ? கொஞ்சம் இங்க வாப்பா ,இங்க பார் இந்த கிரைண்டர் கம்பி அறுந்துடுச்சி கொஞ்சம் சரி பண்ணி தரனும் .''அதுகென்ன ,பண்ணிட்டா போச்சு '' இந்த நேரத்தில் ஜீவாவை பற்றி .ஜீவா பார்பதற்க்கு எந்த பெண்ணையும் கவரும் ஒரு கலையான முகம்.அப்பா,அம்மா கார் விபத்தில் போய் சேர்ந்து விட அவர்கள் கொடுத்து விட்டு சென்ற டிகிரி கை கொடுக்க அசாத்திய திறமையால் தனியார் நிறுவனத்தில் எக்சிக்யுட்டிவ் மேனஜராக கை நிறைய சம்பளத்தில் இருக்கிறான் . அவசரமாக மாமியிடம் விடைபெற்று ரெடி யாகி இதோ கிளம்பி விட்டான் . ''சார் '' என்ன சார் சீக்கிரம் சொல்லுங்க என்ன வேணும் இது ஜீவா .இந்த...

உதவி (சிறுகதை )

                                  பறவைகள் அனைத்தும் தன் குஞ்சுகளுக்கு தன்னால் முடிந்த அளவிற்கு இரையை ஈட்டிக்கொண்டு சென்ற மாலை நேரம் , கதவை வேகமாக முன்னுக்கு தள்ளி உள்ளே நுழைந்த செல்வி புத்தக பையை வேகமாக தூக்கி எறிந்தாள். ஏண்டி இவ்ளோ கோபமா இருக்க?இது செல்வியோட அம்மா கோகிலா  இல்லமா எங்க பள்ளில ''ஆண்டு விழா வருதும்மா அதுல்ல நிறைய போட்டிங்க வைக்கிறாங்க '' அதுல பேச்சு போட்டில ..டீச்சர் என்ன கலந்துக்க சொல்லி கட்டாயபடுத்தி என் பேர் கொடுத்துட்டாங்க ..அதான் ஒரே டென்சன் ம்மா ..சரி நீ போய் முகம் கழுவிகிட்டு வந்து இந்த காப்பியகுடி.நான் அப்பா கிட்ட சொல்றேன் . மூர்த்தி செல்வியின் அப்பா இரவு வீடு திரும்பியதும் கோகிலா பள்ளி விசயத்தை சொல்ல ,,சரி நாளைக்கு நம்ம வீட்ல வேலை செய்யுற கற்பகம் பையன வரசொல்லு அப்படின்னு சொல்லிட்டு தூங்க போய்விட்டார் மூர்த்தி . இருளும் ஒளியும் சண்டை இட்டு இருள் தோல்வியை தழுவிய காலை நேரம்...

விவேகானந்தர் சிந்தனை ;

விவேகானந்தர் சிந்தனை ; பிறர் முதுகுக்கு பின்னால் நீ செய்வது தட்டி கொடுப்பது மட்டுமே .