வான்கூவர் நகரம் ஒன்றில் ரயில் நிலையம் ஒன்றுண்டு. மரக்கட்டைகளினால் ஆன அதன் நடைமேடையில் முன்பொருமுறை நானும் அம்மாவும் ரயிலுக்காக காத்திருந்தோம். அங்கு வைத்துதான் அம்மாவின் தம்பி இறந்து போனதை யாரோ வந்து அம்மாவிடம் கூறினார்கள் கன்னங்களைத் தாண்டி கால் விரல்களில் கண்ணீர் துளிகள் விழுந்த பிறகும் அம்மா அந்த நடைமேடையிலேயே நின்று கொண்டிருந்தார். உலகம் என்பது அணுக்களால் ஆனது நாம் ஒரு மேசையைத் தொடுகிற பொழுது அந்த மேசையும் நம்மைத் தொடுவது உண்மையானால் அந்த நடைமேடையில் அம்மாவின் அணுக்களும் கலந்திருக்கும். நான் போய் அந்த நடைமேடையில் அம்மா நின்ற இடத்தில் நிற்க போகிறேன். நீண்ட நேரம், மிக நீண்ட நேரம் கன்னங்களைத் தாண்டி கால்விரல்களில் கண்ணீர் துளிகள் விழுந்த பிறகும் . -நான்சி வில்லியர்ட் உறவுகளின்றி திரியும் உயிர்கள் எப்படி இருக்கும் கடிதங்களின்றி வெறுமென கிடக்கும் தபால் பெட்டியைப்போல,மரமென்னும் உயிரைத் தாங்க ...
வேம்புளியூர் மயானம் இரவு நிசப்தமாய் இருந்தது. புதியதாய் இறந்த பிணங்கள் மட்டும் லேசாய் புகைந்து கொண்டிருந்தன. தோற்றம் சரியாய் தெரியவில்லை. மறைவு மட்டும் தெரிந்தது. மூர்த்தி -18.07.2009 மின்னல் வெளிச்சம் ஒன்றில் இந்த தேதி துல்லியமாய் தெரிந்தது .மழை வர காத்துகொண்டிருக்கும் மேகங்கள் மின்னிக்கொண்டே இருந்தன. உஷ்..எனும் சத்தத்தோடு மரங்கள் விசும்பி கொண்டிருந்தது.. லேசாய் முனகல் சத்தம் கேட்டது அந்த சமாதியில்........ மூச்சு விடும் சத்தம்... மூர்த்தி இறப்பதற்கு சில நாட்கள் முன்பு!!!! டேய் மூர்த்தி நீதான் இதுக்கு சரியானவன் 'ஹ்ம்ம் ஏறு கீழே குதிடா டேய்!! என்ன விட்டுடுங்கடா நாம ஏதோ சின்ன சின்ன திருட்டு பண்ணிட்டு இருந்தோம் ''கோவில நகை கொள்ளை அடிக்கிறது பாவம் டா'' நான் போக மாட்டேன் .. சே ''அப்படியே'' அரைஞ்சேன்னு வச்சிக்கோ மவனே கீழே குதிச்சி ஓடி போய்டு''. மூர்த்தி காத்திருக்க சங்கரும் ரவியும் நகைகளை திருடி வந்து விட்டனர். பல கோடி மதிப்பிருக்கும் அந்த நகைகளுக்கு பின்னே!! நாவலூர் சிவன் கோயில் னா சும்மாவா ? மூர்த்தி பயத்தில் நடுங்க டேய் என்ன ...
இங்க இறந்து கிடக்கிறது நான் தான் .நான் எப்பவும் போலத்தான் இருந்தேன் , ஆனா எல்லாரும் சொல்றாங்க நான் செத்துடேனாம். நான் சாகுற வரைக்கும் எனக்கு தெரியாது மரணம் எப்படி இருக்குமென்று , இறந்தவன் நான் சொல்றேன் நீங்க தெரிஞ்சுகங்க! அது ஒரு மணம்,அமைதியான வெண்மை நிறம் , அதிக ஒளி, சத்தமில்லாதது , கடலில் நீச்சல் அடித்துவிட்டு இரவில் தூங்கும் போது வரும் பிரம்மை போல் இருக்கும் , இல்லாத ராட்டினத்தில் சுற்றுவது போல. எனக்கு தெரியாது இவ்வளவு சீக்கிரம் நான் இறப்பேன் என்று , என் கைபேசிக்கு புதுசா வந்திருந்த குறுந்தகவல் யாருடையது என்று கேட்கலாம் என பதில் அனுப்பி இருந்தேன், நீங்க யாரு?இன்னும் பதில் வரலை அவர்களிடமிருந்து , பதில் வந்தாலும் இனி என்னால அது யாரென்று தெரிஞ்சிக்க முடியாது. நான் கிழே விழுந்து கிடக்கும் போது என் கைபேசியை எடுத்து ஒருவர் எனக்கு தெரிந்தவரை அழைக்க பார்த்தார், நானும் தான் அவர்க்கு உதவுனேன் அவர்க்கு அது காதில் விழலை, அண்ணே ..அதுல நம்பர் ரெண்டை அழுத்தி கால் பட்டன் கொடுங்க என் அண்ணன் பேரை ஸ்பீட் டயல் வச்சிருக்கேன்!! இந்த ம...
Comments