அகம்புறம்
நன்றி ஆனந்த விகடன் இதழ் -12.03.2008 அகம்புறம் . வண்ணதாசன் . ஆறு 'பி 'இல் இருந்து ஏழு 'பி 'க்கு போனேன் .ஜான்சன் சார்.ஜான்சன் சாமுவேல் என்பது முழுபெயர் . ஹோம் வொர்க் என்று ஒன்று எல்லோருக்கும் கொடுப்பார்கள் .அதில் தான் பரமண்டல ஜெபம்இருக்கும் .ஹை ஸ்கூலில் இருந்து ஆறாம் கிளாஸ் வரை ஆசிரியர் யார் யார் ,பெயர் இன்னின்ன.எப்போது கால் பரீட்சை என்றைக்கு லீவு என்பதல்லாம் அதிலிருந்து மட்டுமே தெரியும் . ஜான்சன் சார்வா பற்றி ஏகப்பட்ட கதைகள் உண்டு .அவர் கோட்டு பைக்குள் எப்போதும் அல்வா வைத்திருப்பார் என்றும் ,கைகுட்டையால் முகம் துடைப்பது மாதிரி யாருக்கும் தெரியாமல் அல...