விட்டில் பூச்சி(சிறுகதை)
அதிகாலை தென்னங்கீற்றுக்களின் இடைவெளியில் சூரியன் எட்டி பார்த்துகொண்டிருந்தான். கடிகாரத்தில் நேரம் சரியாய் 6.40யை கடந்திருந்தது. "சரி... என்னப்பா? ஆளாளுக்கு ஒருத்தர் வாயை ஒருத்தர் பார்த்துகிட்டு இருக்கீங்க. சட்டு புட்டுன்னு ஆக வேண்டிய காரியத்தை பாருங்கப்பா!!" கூட்டத்தில் இருந்த முருகேசன் தன் கையில் வைத்திருந்த துண்டை உதறியவாரே சொல்லி முடித்தார். "அண்ணே! உங்களுக்கே தெரியும், மூத்த புள்ள நான் இப்படி குத்து கல்லுமாதிரி இருக்கும் போது என்னைய விட இளையவன் சுடலை அவனுக்கு சொத்துல அதிகமா எழுதி வச்சா என்ன அர்த்தம் ?" சத்தமாக சொல்லி முடித்தான் முத்தையா "அது சரி... முத்தையா உங்க அப்பா நல்ல சிவம் ஊர்ல எவ்ளோ பெரிய மனுஷன், இப்ப அவர் இருக்குற நிலையில நீ இப்படி பேசுனா அவர் மனசு எவ்ளோ பாடுபடும்." சுவரின் மூலையில் சோகமாக அமர்ந்திருந்தான் சுடலை. நல்ல சிவம் கட்டிலில் ...