ரூ .6.50 பயணச்சீட்டு



நான் போகிற வண்டி திருவொற்றியூர் ல இருந்து அம்பத்தூர் போய் கிட்டு இருந்தது ''(34)
டிக்கெட் எடுத்து நானும் ஜன்னலோர சீட்ல வழக்கம் போல அமர்ந்திருப்பேன் ,அதே நேரம் ,அதே பேருந்து
என்பதனால் அதே இருக்கையும் கூட !!,பஸ்ல கூட்டம் அதிகமாகுற நேரத்துல யாராவது ''வயசானவங்க

வந்தா அவங்களுக்கு!'' என் சீட்ட  கொடுத்துடுவேன் ,நான் கொஞ்ச நேரம் நின்னுகிட்டு வருவேன்
,எப்படியும் நான் இறங்குவதற்கு முன்னாடியே அவங்க இறங்கிடுவாங்க அதனால ..சில சமயம்

திருவொற்றியூர் வரைக்கும் நின்னுகிட்டே வந்திருக்கேன் ,

போகும் போது இந்திரா சௌந்தரராஜன் அவர்கள் நாவல்தான் எனக்கு பொழுது போக்கே ஒரு நாளைக்கு

ஒரு நாவல முடிச்சிடுவேன் ,போகும் போது பாதி ''அத்தியாயத்தையும் வரும் போது மீதி

அத்தியாயத்தையும்'' ,நின்னு கிட்டு வரும் போது கொஞ்சம் கஷ்டம் தான் அத்தியாயமெல்லாம் .
சில சமயம் சீட் ,கிடைச்சும் டிரைவர் ,கண்டக்டர் வர நேரம் ஆகும் பொழுது ,பஸ்சுக்குள்ள பாப்கார்ன்
,வேருகடலை,வியாபாரம் லாம் நடக்கும் ,  ''வேருகல்லேய்ய்..''ன்னு ராகமா  இழுக்கும் போது ஒரு
மாதிரியா இருக்கும்.சில சமயம் இஞ்சி மரப்பா வியாபாரம் கூட நடக்கும் ஆள் குள்ளமா இருப்பாரு பாவம்
,கத்தி கத்தி வியாபாரம் பண்ற தொண்ட வலிக்கு அவர்க்கே சரியா இருக்கும்'' இஞ்சிமரப்பா.!''

அன்னைக்கு பஸ் ல கூட்டம் ங்கறதால படில நின்னுகிட்டு இருந்தேன் ,கூடவே ரெண்டு ஸ்கூல் பசங்க
தொங்கிகிட்டு  இருந்தாங்க ,வழியில ஒரு போஸ்டர் ல வண்ண தொலைக்காட்சி பெட்டி வழங்கும்
விழான்னு தெரிய .அதுல ஒருத்தன் டேய் !குமாரு அங்க பாருடா !டிவி தராங்கலாம்ல'' ன்னு சொல்ல.டேய்

நிறுத்துடா!!'' அவங்க பாக்கெட் ல இருந்தா எடுத்து தராங்க'' எல்லாம் நம்ம பணம் டா ,டிவி கொடுத்தா

கேபிளும் ,கரண்ட்டு பில்லும் யார் கட்டுவா,அவங்க கட்டுவாங்களா ?எனக்கு லேசா சிரிப்பு கூடவே அந்தபோஸ்டரையும் பார்த்தேன் ,,எல்லார்க்கும் எல்லாமும் தெரிஞ்சிதான் இருக்குல ...!!
திருவொற்றியூர் ல இருந்து அம்பத்தூர் போற பேருந்துல யாராவது ஜன்னலோரத்துல உட்கார்ந்துகிட்டு ஏதாவது புத்தகம் படிச்சிட்டு போய் கிட்டு இருந்தா அது நானா தான் இருப்பேன் ,
ஒருநாள் நான் என் சீட்ல உட்கார்ந்துகிட்டு இருந்தேன் ,எனக்கு முன்னாடி இருந்த சீட்ல ரெண்டுபொண்ணுங்க ,மூணு பசங்க உட்காந்துகிட்டு இருந்தாங்க ,கால் செண்டர் ஊழியர்கள் போல ..முன்தினம்
நடந்த கிரிகெட்ட பத்தி பேசிகிட்டு இருந்தாங்க ,இந்தியா மேட்ச் தான் இந்தியா வின் பண்ணிடுச்சுங்க
அதுல ,ஒட்டு மொத்த ஹைலைட்ட்டே டெலிகாஸ்ட் ஆகிட்டு இருந்தது ஆங்கிலத்தில் ,

முன்பக்க படி ஏறி வந்த ஒரு யாசிக்கும் சிறுமி அழுக்கான ஆடையோடு அவர்கள் பக்கம் போய் அக்கா !!''!!,அண்ணா !!ன்னு அழைக்க அவர்கள் கண்டு கொள்ளவே இல்லை அவளை'' ,தலையை

 கோதிக்கொண்டிருந்த சிறுமியை அழைத்து மூணு ரூபாய் கொடுத்தேன் ,ஆமாங்க ஒரு டீ வாங்கணும்னா

கூட இப்ப மூணு ரூபா தேவை படுதுல அதான் .

யாசிக்கும் போது கூட தமிழ் மொழி அழகுதான்ல .....

ஒருநாள் பாப்கார்ன் விக்குறவரு பஸ் இறங்கி போகும் பொழுது ஒரு பாக்கெட் கீழ விழுந்துடுச்சி ,அதை
எடுத்து அவர்கிட்ட கொடுக்கும் பொழுது ரொம்ப நன்றி தம்பின்னு சொன்னாரு ,'',இருக்கட்டும்னே ''!!நீங்க
இதுல அஞ்சு பாக்கெட் வித்தாதான் இந்த பாக்கெட்  லாபம் பாக்க முடியும் ன்னு சொல்லிட்டு வந்துட்டேன்,
மறுபடியும் அவர் நன்றி சொன்னார் ,நான் சிரிச்சிகிட்டே தலையை ஆட்டிகிட்டு வந்து என் சீட்ல

உட்காந்துகிட்டேன் ,

ஒரு நாள் நான் வேகமா போன பஸ்ஸ பிடிக்கும் போது என் மணிபர்ஸ் கீழ

விழுந்துடுச்சு அதை ஒருத்தர் எடுத்து கொடுத்தார் அப்ப நான் சொன்ன நன்றி என் முன்பக்கம் போய்கிட்டு
இருந்த வண்டி கண்ணாடில தெரிந்தது ,இப்படி சின்ன சின்ன உதவிகளிலும் ,நன்றிகளிலும் தான் மனித
வாழ்க்கை  தன்னோட அடிப்படை  சுவாரஸ்யத்தை இழக்காமலே இருக்கிறது ,எனக்கும் அப்படித்தான் தெரிகிறது .
அண்ணா நகரை தாண்டி போய்கிட்டு இருந்த பேருந்து வழியில ஒரு அம்மா ,தன்னோட மகனோட,பஸ்ஸ நிறுத்த கை அசைச்சாங்க,டிரைவர் நிறுத்தாமலே சென்று விட்டார் ,மற்றொரு நாள் கீழ்
பாக்கத்தில் ஒருத்தர் பஸ்ஸ நிறுத்த கை அசைக்க நிறுத்தி விட்டார் டிரைவர் அவர்க்கு இவர்தோஸ்த்தாம் அதனால நிறுத்தி இருக்காரு ,எல்லாரையும் ஏன் நம்ம வீட்ல ஒருத்தரா?''நினைகிறதில்லை,?''

நாவல்ல ஒரு அத்தியாயம் முடிஞ்சிடுச்சி ..

ஒருநாள் சுவர்ள்ள போஸ்டர் ஒட்டிகிட்டு இருந்தான் சிறுவன் ,சிக்னல் என்பதால் நீண்ட நேரம் அவனைஎன்னால் பார்க்க முடிந்தது ,பசையை எடுத்து லாவகமாக தடவி புரட்டி ஒட்டிக்கொண்டு இருந்தான்''

போஸ்டர் ல இருந்தது ''குழந்தை தொழிலாளர் ஒழிப்பு மாநாடாம்'' ,அந்த போஸ்டர் ல இருந்த தலைவருக்கு சிரிக்க மட்டுமே நேரம் இருந்தது ,பேப்பர் போடுற பையன்,போஸ்டர் ஓட்டுற பையன் களெல்லாம் படிச்சி
இருக்கணும்ன்னு அவசியமில்லையே !!,,நொந்து கொண்டேன் நான் .
அன்னைக்கு கைல சூட் கேசட ஒரு ஆள் வாசலிலுருந்து தெருவில் விழுகிறார் ,பின்னாடியே வீட்டின் முதலாளியும் வருகிறார் ,உள்ளே விற்பனைக்கு வந்த பிரதிநிதி விரட்டி அடிக்க படுகிறார் ,

வெளியே இருந்த பலகையில் 'Beware Of Dog'என்பதற்கு பதிலாக 'Beware Of Men''என இருந்திருக்கலாம் ,

''மனிதன் நோக மனிதன் பார்க்கும் வாழ்க்கை இனி உண்டாகும்'' ன்னு சொன்னாரு பாரதி ,இப்ப அதுதான் நடந்துகிட்டு இருக்கு ,அதுதானே ?ஆமாமா!'' அதுதான் நடந்துகிட்டு இருக்கு,சிறு மன வருத்ததோடு அதை நான் பார்த்து கொண்டிருந்தேன் .நான் இறங்கும் இடமும் வந்து விட்டது .

,நாவலும் எல்லா அத்தியாயங்களும் முடிந்து விட்டது ,நான் வீடு அருகில் வந்து விட்டேன் ,மரத்தில்இருந்த'' பறவை ஒன்று தன் குஞ்சுகளுக்கு பாஷை கற்று கொடுத்து கொண்டிருக்கிறது,

''பக்கத்து வீட்டு தபால் பெட்டி ஒன்று'' தகவலுக்காக காத்து கொண்டிருக்கிறது'' ,,

வாசல் வந்தடைந்த நான் பாக்கெட்டில் இருந்த பயண சீட்டை எடுத்து கீழே எறிகையில் காற்றில் இரண்டு மூன்று அலையலையாய் ஏதோ சொல்ல வந்து தரையை சென்றடைந்தது ..''

''மனிதனை மதிக்க கற்று கொள் ''என்பதாக கூட அது இருக்கலாம்'' .



முற்றும் -பா ;சண்முகம்

Comments

Popular posts from this blog

கோப்பையை பருகும் தேநீர்

கண்ணாடி நாட்கள் (சிறு கதை )

விட்டில் பூச்சி(சிறுகதை)