மரணமும் அதற்க்கு மேலும் .......


இங்க இறந்து கிடக்கிறது நான் தான் .நான் எப்பவும் போலத்தான் இருந்தேன் , ஆனா எல்லாரும் சொல்றாங்க நான் செத்துடேனாம். நான் சாகுற வரைக்கும் எனக்கு தெரியாது மரணம் எப்படி
இருக்குமென்று , இறந்தவன் நான் சொல்றேன்  நீங்க
தெரிஞ்சுகங்க!

அது ஒரு மணம்,அமைதியான
வெண்மை
நிறம் , அதிக  ஒளி, சத்தமில்லாதது , கடலில் நீச்சல் அடித்துவிட்டு இரவில் தூங்கும் போது வரும் பிரம்மை போல் இருக்கும் , இல்லாத ராட்டினத்தில்

சுற்றுவது போல.
 எனக்கு தெரியாது இவ்வளவு சீக்கிரம் நான் இறப்பேன் என்று , என் கைபேசிக்கு புதுசா வந்திருந்த குறுந்தகவல் யாருடையது என்று கேட்கலாம் என பதில் அனுப்பி இருந்தேன்,  நீங்க யாரு?இன்னும் பதில் வரலை அவர்களிடமிருந்து , பதில் வந்தாலும் இனி என்னால அது யாரென்று  தெரிஞ்சிக்க முடியாது.

நான் கிழே விழுந்து கிடக்கும் போது என் கைபேசியை எடுத்து  ஒருவர் எனக்கு தெரிந்தவரை  அழைக்க பார்த்தார், நானும் தான் அவர்க்கு உதவுனேன் அவர்க்கு அது காதில் விழலை,  அண்ணே ..அதுல நம்பர்
ரெண்டை அழுத்தி கால் பட்டன் கொடுங்க என் அண்ணன் பேரை ஸ்பீட் டயல் வச்சிருக்கேன்!! இந்த மாதிரி மூணு முறை சொன்னேன் , அவருக்கு அது கேட்கலை.
எப்படியோ என் வீட்டுக்கு தகவல் சொல்லியாச்சு ,என் அண்ணன் தான் வந்தார் முதலில் கண்களில் வழிந்த நீரை துடைத்து கொண்டே என் தம்பிதான்.. சார் 'எப்படிங்க நடந்தது ?வேற ஒருத்தர் தண்ட வாளத்தை கடக்க பார்த்திருக்கார் அவர் வண்டி இந்த பள்ளத்துல மாட்டிகிச்சு ,ரொம்ப சரியா சொன்னார் அவர் ' உங்க தம்பிதான் அவரை காப்பாத்த ஓடிவந்து வண்டிய தள்ளிவிட்டார் பாவம் அவர் மாட்டிகிட்டார்.,ஆமாங்க  நானும் பார்த்தேன்னு கூட இருந்தவங்க  சொன்னாங்க'. அதுல ஒருத்தர் தோளில்  பை ஒன்றை மாட்டிருந்தார் ,எத்தனை பேரோட தோளை அவங்க தோளில்  தொங்குற பை தாங்குதுல!!

அண்ணாச்சி கடை பக்கமாதான் வந்தது என் சவத்தை ஏத்திகிட்டு வண்டி , மீனாக்ஷி அம்மன் கோவிலை கடக்கும் போது எதேச்சையாக  கை உதட்டுக்கு போகுது ''கடவுளே எல்லாரும் நல்லா இருக்கணும்'' நான்  இறந்து விட்டேன் என்பதை மறந்து 'சிறு வருத்தம் எனக்கு இன்னும் முற்று பெறாத கவிதைகள்,பேர் வைக்காத கதைகள் ,என என் மின்னஞ்சலில் இருக்க இனி அதை யார் பார்க்கமுடியும் என வருந்துகிறேன் .

குழுமத்துல நேத்து சண்டை போட்டது ,எப்படி  இனி அதை அவர்க்கு புரிய வைப்பேன் , பசி வேற எடுக்குது எனக்கு ,எப்பவும் மாலை வீட்டுக்கு வந்தஉடன் அம்மா போட்டு தர ஹார்லிக்ஸ் இன்னைக்கு குடிக்க முடியாது. சின்ன சின்ன பிரச்னையும் சரி பெரிய பெரிய பிரச்சனைகளும் எவ்ளோ வந்தாலும்  சரி இந்த பூமில எப்படியாவது வாழணும்னு இருக்கோம்ல நாமெல்லாம் , இப்ப அதுல நான் இல்லை ,
எதிர் வீட்டு பொண்ணுக்கு எப்படி புரிய வைப்பேன் கேரம் விளையாடும் போது அவங்களை பார்த்து சிரிச்சதா அவங்க அக்கா கிட்ட சொல்லி
என்னை சத்தம் போட்டது 'இனி புரிய வைக்க முடியாது '
அது உண்மையாகவே ஆகி விடுமோ ?!

அப்போலோ கம்ப்யூட்டர் சென்டர் ல இன்னும் ஒரு மாசம் பீஸ் கட்டணுமே ,அஞ்சு சப்ஜெக்ட் இன்னும் பேலன்ஸ்  இருக்கே !
இறகொடிந்த வண்ணத்துப்பூச்சி போல துடித்து கொண்டிருக்கிறேன் நான், மிக உயரமான இடத்தில்.


தனியே நிற்கிறேன் ,யாரோ துரத்துகிறார்கள் ,உயரத்தில் இருந்து கிழே விழுவது போல் உள்ளது ,நம் உருவங்கள் குறுகி விடுவதுபோல் தோன்றுகிறது ,மீண்டும் பெரிதாகிறது சத்தமிட்டு அழுகிறேன் நான்
நீண்ட நாள் கழித்து ,உடலில் பெரிய பாரம் போல் தெரிகிறது ,

நேற்று மருத்துவமனையில் பார்த்த ஒரு குழந்தை படம்

தன் வாயில் ஆள்காட்டி விரலை வைத்து உஷ்ஷ்ஷ் ........

எனும் சொல்வது போல் உள்ளது ,லேசாய் எடை குறைவது 

போல் தோன்றுகிறது ,வெளிச்சம் அதிகமாகிறது ,அழகாய் பறவைகள் சத்தம் கேட்கிறது ,தூரத்தில்  ஒலிக்கும் சாமி பாடல் ,டேய்!! நீ இன்னும் சாகலை டா !நல்லாதான் இருக்க கனவுடா இது ,ஹப்பா!!

உள்ளுக்குள்ள சில்லுனு இருக்கு மூச்சு எல்லாம் நல்லா இருக்கு ..

அரண்டு எழுந்த நான் பக்கத்தில் இருக்கும் கைபேசியை பார்க்கும் பொழுது அதே சச்சின் தீம் ,நேரம் காலை ஐந்து நாற்பது ,

கடவுளே!! இது போல கனவு இனி வரவே கூடாது மறுபடியும் கடவுளே

எல்லாரும் நல்லா இருக்கணும் ,வெளியே விடிந்து விட்டது .

பா.சண்முகம்

Comments

Popular posts from this blog

கோப்பையை பருகும் தேநீர்

கண்ணாடி நாட்கள் (சிறு கதை )

விட்டில் பூச்சி(சிறுகதை)