இது காதல் விளையாடும் தெரு(சிறு கதை )
வசந்த காலம் வந்துவிட்டதை குயில் கூவி தெரிவித்தது. வானம் மேக மூட்டத்துடன் இருக்க, சூரியன் பூமியில் பட அவசரபட்டு கொண்டிருந்தான்.
பிரவீன், டேய்... பிரவீன் !! எழுந்திருடா விடிஞ்சாச்சு!!.
அம்மா குரல் கேட்டு கண்விழித்தான் பிரவீன். சோம்பல் முறித்து பிரஷ் யையும் பேஸ்டையும் எடுத்துகிட்டு வெளியே வந்தான்.
சூரிய கதிர் கொஞ்சம் கொஞ்சமாக பூமியில் பிரசன்னமாகி கொண்டிருந்தது. சாலையில் சிறு சிறு சத்ததோடு மக்கள் நடமாடிகொண்டிருந்தனர். பேப்பர் போடும் சிறுவனின் சைக்கிள் பெல் சத்தம், இட்லி மாவு விற்பவரின் குரல், நடுவே வர்ஷா கல்லூரிக்கு போறதையும் பார்த்தான்.
இந்த இடத்தில் ''வர்ஷா''வை பற்றி. "வானத்திலிருந்து விழுந்த நட்சத்திரம் போல் வர்ஷா அவ்ளோ அழகு". இன்னும் சினிமா காரர்கள் யாரும் பாக்கலை, பார்த்திருந்தால்... ''ஏலம் எடுத்து நடிக்க வச்சிருபாங்க வர்ஷாவை''. இரண்டு பேரும் ஒரே ஏரியா என்பதால் அடிக்கடி சந்தித்து கொள்வார்கள். வர்ஷா தூரத்துல வந்தாலே நம்மாளு நண்பரை யாரும் பக்கத்துல சேர்க்காம தனியா வருவான். ரெண்டு பேரும் ஓரக் கண்ணால பார்த்துட்டு போய்டுவாங்க.
அவ போன உடன், "மச்சி, இருங்கடா நானும் வரேன்" என பசங்க கூட வருவான்.
டேய் மச்சி, ஏன்டா? இன்னும் அவ கிட்ட லவ்வ'' சொல்லாம இருக்க? சொல்ல வேண்டியது தானே டா.
டேய்... இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் மச்சி, நல்லா படிக்கட்டும், எனக்கும் வேலை ஒண்ணு நல்லதா கிடைச்சபிறகு போய் பொண்ணு கேட்கிறேன் என எப்பவும் நியாயாமா பேசுவான் பிரவீன்...
டேய்!! நீ அவ்ளோ நல்லவனாடா?
டேய் அடங்குங்கடா... இது பிரவீன்.
"அடங்குங்கடா"... இது பிரவீன் அடிக்கடி சொல்ற வார்த்தை...
அது ஒரு சனிக்கிழமை மாலை பஸ் ல வீட்டுக்கு வந்துகிட்டு இருந்தான் பிரவீன். நல்ல கூட்டம், வெளிய மழை கொட்டிகொண்டிருந்தது. தேரடில வர்ஷாவும், அவ அம்மாவும் பஸ் ல ஏறுனாங்க. எதேச்சையா அவங்களைப் பார்த்த பிரவீன், அவங்களை கூப்ட்டு, "அம்மா.! இங்க உட்காருங்க"ன்னு தன்னோட சீட்டை கொடுத்தான். சாரல் அடித்து கொண்டிருந்தது இருக்கையில். ஜன்னலை கஷ்ட பட்டு மூடி தன்கைகுட்டையை கொடுத்தான் அவர்களிடம்.
"டேய்.! பிரவீனு"...பின்னாடி சீட்ல இருந்து அவன் பிரெண்ட் திவாகர் குரல் கொடுக்க, "டேய் அடங்குரியா!! என்பது போல் ஒரு முறை முறைத்தான் பிரவீன்.
மழை நின்று விட்டது. வீடும் வந்தது. ரெண்டு பேரும் எப்பவும் போல பார்த்துகிட்டே வீட்டுக்கு வந்துட்டாங்க...ஒருநாள் பஸ் ல இருந்து பிரவீன் இறங்கும் போது, ஒரு பெண் குரல் கேட்டு திரும்பியவன், என்ன ?என்னையா கூப்டீங்க? என்றான்.
வீடு,
பிரவீன் உள்ளே நுழைய, "மழையே மழையே தூவும் மழையே இது காதல் தானா'' ன்னு "ஆதி" சிந்து மேனனிடம் டூயட் பாட, சத்தமாக வைத்தான் பாடலை... உள்ள இருந்து, "டேய்!சத்தத்தை குறைடா" ன்னு அம்மா கத்த, அதை அவன் காதில் வாங்கி கொள்ளவே இல்லை.
ஹ்ம் நான் ,நான்...
சொல்லுங்க!என்ன விஷயம்?
இல்லை அது வந்து... வந்து...
"சீக்கிரம் சொல்லுப்பா"... நான் கிளம்பனும்.
இல்லை, "என் பேரு அனிதா".
இருகட்டுங்க, நல்ல பேரு. என்ன விஷயம்?
நான் உங்கள ரொம்ப நாளா பாலோ பண்றேன். சோ, உங்கள எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு... நான் உங்கள லவ்பண்றேன். அதான்...
ம்ம்ம்... "உங்களை நான் இதுவரைக்கும் பார்த்ததே இல்லை". உங்க பேர் என்ன சொன்னிங்க?... ம் அனிதா, ம் அனிதா, "என்ன பண்றீங்க நீங்க?."
"பாரதி ஆர்ட்ஸ் காலேஜ்" ல பைனல் இயர் படிக்கிறேன்...
ஹ்ம் அதை ஒழுங்கா பண்ண வேண்டியது தானே... ஏன் காதல் அது இதுன்னு... "ஒழுங்கா படிக்கிற வேலைய பாருங்கம்மா'' ''ஏன் இப்படி...
ஒரு நிமிஷம் நான் சொல்றதை கேளுங்க...
நீ ஒண்ணும் சொல்ல வேண்டாம்... "இது என்னது கைல?"
சாக்லேட்...
இங்க கொடு அதை பிடிங்கி கொண்டு இனிமேல் லவ் கிவ்வுனு உன்னை இந்த இடத்துல பார்த்தேன்... ஒழுங்கா பத்திரமா வீட்டுக்கு போங்க... என சொல்லிவிட்டு, பிரவீன் வீட்டிற்க்கு வந்து விட்டான்.ஒரு நாள் வர்ஷா அந்த தெருவுல போய்கிட்டு இருக்கும் போது, "பிரவீன், அவ பக்கத்துல போய் ஹே... வர்ஷா நான் உனக்காக பார்க் ல காத்திட்டு இருப்பேன் நீ மறக்காம வந்திரு" என சொல்லிச் செல்ல, வர்ஷா ஒரு மாதிரியாக பார்த்துவிட்டு ஒன்றும் பேசாமல் சென்று விட்டாள்.
காலை எப்பவும் போல அதே மாவு விற்பவர் குரல், பேப்பர் போடும் சிறுவனின் சைக்கிள் பெல் சத்தம் என நாட்கள் நகர்ந்து கொண்டே இருந்தது. வர்ஷாவின் படிப்பும் முடியும் நிலையில் இருந்தது. பிரவீனும் நிறைய இன்டர்வியுவ பார்த்திட்டு அவனுக்கு பிடிச்ச ஐ டி கம்பெனில ஜாயின் பண்ணிருக்கான்... அவன் பர்ஸ் ல இருக்குற விசிடிங் கார்ட் ல ''மங்கள் இன்போசிஸ் ''ன்னு இருக்கும். அண்ணாநகர், அதான் அவன் வேலை செய்யுற அலுவலகம்.
மாலை விதவிதமான ரோஜா பூக்களை வாங்கிகொண்டு, பிரவீன் பூங்காவிற்கு கிளம்பினான்... நடுநடுவே அந்த பூக்கள் வாடாமல் இருக்க தன் மூச்சு காற்றை அந்த பூ வைத்திருந்த பையில் அடைத்தான். பஸ்ல இருந்தவங்க எல்லாரும் ஒரு மாதிரியா பார்க்க, "ம்... இல்ல... ஒண்ணுமில்லை..." என சமாளித்தான்.
வானவில் பார்க்!
தனியே அமர்ந்திருந்தாள் வர்ஷா. அருகில் சென்றவன், "ஹே வர்ஷா! ரொம்ப நேரம் வெயிட் பண்றியா?"
இல்லை. "இப்பதான் வந்தேன்!"
இதுதான் வர்ஷா அவனிடம் பேசும் முதல் வார்த்தை.
சரி. எதுக்கு என்னை, "இங்க வர சொன்னிங்க?"
முதல்ல இதை பிடிங்க என தான் வாங்கி வந்த ரோஜா பூக்களை கொடுத்தான் பிரவீன்.
அமைதியாக வாங்கியவள், "என்ன இத்தனை வாங்கிட்டு வந்து இருக்கீங்க"...
இல்லை, எல்லாமே நல்லா இருந்தது. அதான்...
எனக்கு ரோஜா பிடிக்கும்னு எப்படி தெரியும்?
ம்... ஒரு முறை பார்த்தேன், அம்மா கூட இதுக்காக சண்டை போட்டதை...
அய்யோ, ஆமாவா... ம்... "சரி தேங்க்ஸ்"...
இட்ஸ் ஓகே, "என்ன விஷயம்?, இங்க வர சொல்லி இருக்கீங்க?"...
இரு, சொல்றேன்... "என்னை உனக்கு பிடிக்குமா?"
லேசாய் தலை அசைத்தாள் வர்ஷா, ம்... "பிடிக்கும்".
நீ, என்னை கேட்க மாட்டியா?
ஓ... "சொல்லுங்க, "என்னை உங்களுக்கு பிடிக்குமா"?
கொஞ்சம் இல்லை, ரொம்ப பிடிக்கும்... மூணு வருஷத்து லவ்வாச்சே...
என்னது !!
ஹே... இரு, "ஏன் ஷாக் ஆகுற"? நான் உன்னை ரொம்ப காதலிக்கிறேன். நீயும், "என்னை உனக்கு பிடிக்கும்"னு சொல்லிட்ட... வேற என்ன, "நீயும் உண்மைய சொல்லிடு"...
இல்லை, "இந்த காதல், கல்யாணம்'' னா எங்க வீட்ல சம்மதிக்க மாட்டாங்க...
உனக்கு என்னை பிடிச்சிருக்குல... மத்ததை நான் பார்த்துக்குறேன். உங்க அப்பா, அம்மா சம்மதம் ஏற்கனவே நான் வாங்கிட்டேன்.
என்ன?... ஆமாவா?... உண்மையா சொல்றீங்க?...
ம் உண்மைதான்... அன்னைக்கு, "உன் கூட பஸ்ல உங்க அம்மா வந்தாங்கள அன்னைக்கு தான்".
எப்படி பேசினிங்க ?
நேரா போனேன், "அம்மா உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்"னு சொன்னேன். அவங்களும் என்னனு கேட்டாங்க ? நான், "உங்க பொண்ணை மூணு வருஷமா லவ் பண்றேன்." இன்னும் வர்ஷா கிட்ட சொல்லலை. படிப்பு முடியட்டும்னு வெயிட் பண்ணிட்டு இருக்கேன்... நீங்க சம்மதிச்சா நாளைக்கே என் அம்மா ,அப்பாவை பேச வர சொல்லுவேன். "என்ன சொல்றீங்க", உங்க சம்மதம் என்ன?னு கேட்டேன்...
அம்மா, என்ன சொன்னாங்க அதுக்கு?
"இரு, சொல்றேன்... சரி தம்பி, "உன்னை பார்த்தா நல்ல பையன் போலதான் இருக்கு" முறையாதான் வந்து பேசுற... நான் வர்ஷா அப்பா கிட்ட சொல்லிட்டு உனக்கு சொல்றேனே!!னு சொன்னாங்க...
ரெண்டு நாள் கழிச்சி, நீ வீட்ல இல்லாத போது நானும், அப்பா அம்மாவும் போய் உங்க வீட்ல பொண்ணு கேட்டுட்டோம்... "இப்ப உனக்கு சம்மதமா?"...
ஹையோ !!ஆமாவா?... "நான், இதை எதிர் பார்க்கவே இல்லை"...
என்ன பண்றது, வாழ்க்கைல நாம எதிர் பார்ப்பது சில சமயம் நடக்காது, எதிர் பார்க்காத சில விஷயம் இது போல நடந்துடும்". சரி தானே...
ம்ம்... ஆமோதித்தாள் வர்ஷா.
சரி, "நான், உங்கிட்ட ஒரு விஷயம் கேட்கணும் ஒழுங்கா சொல்றியா"? வர்ஷா.
என்ன கேட்கணும், கேளுங்க.?
இல்லை. "என் மேல உனக்கு நம்பிக்கை இருக்கா? என்னை நம்புறியா?"
ம்... ரொம்ப நம்புறேன்... அன்னைக்கு, நான் உங்களை பஸ்ல பார்த்தேனே... அப்பவே முடிவு பண்ணிட்டேன். அனிதா உங்க கிட்ட பேசினாலே அப்ப...
உனக்கு எப்படி தெரியும் அது?
அனிதாவைப் பேசச் சொன்னதே நானும், என் பிரண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து தானே?...
அடிப்பாவி, "நீ என்னை விட விவரமா தான் இருக்க !!உன்னை என்ன பண்றேன் பார்" என சொல்லி கொண்டே பிரவீன், வர்ஷாவை துரத்த செல்லமாய் ஒருவரை ஒருவர் தட்டி கொண்டனர். பூங்கா விட்டு வெளியே வரும் போது இருவரும் கை கோர்த்தபடியே வெளியே வந்தனர்.
மறுநாள், தீபாவளி மாலை பிரவீன் தன் கைபேசியில் இருந்து ஒரு குறுந்தகவலை வர்ஷாவிற்கு அனுப்பினான்,
''விண்ணில் பறக்கும் ராக்கெட்டுகள் பல அனுப்பிவிட்டேன்
ஒரே ஒரு முறை உன் வீட்டு மாடிக்கு வந்து விட்டு செல்லேன்
மனம் மகிழ்ச்சியுடன் கொண்டாடிவிடும் தீபாவளியை ''

Comments