Posts

Showing posts from 2011

வேட்டை

Image
வேம்புளியூர் மயானம் இரவு நிசப்தமாய்  இருந்தது. புதியதாய் இறந்த பிணங்கள் மட்டும் லேசாய் புகைந்து கொண்டிருந்தன. தோற்றம் சரியாய் தெரியவில்லை. மறைவு மட்டும் தெரிந்தது. மூர்த்தி -18.07.2009 மின்னல் வெளிச்சம் ஒன்றில் இந்த தேதி துல்லியமாய் தெரிந்தது .மழை வர காத்துகொண்டிருக்கும் மேகங்கள் மின்னிக்கொண்டே இருந்தன. உஷ்..எனும் சத்தத்தோடு மரங்கள் விசும்பி கொண்டிருந்தது.. லேசாய் முனகல் சத்தம் கேட்டது அந்த சமாதியில்........ மூச்சு விடும் சத்தம்... மூர்த்தி இறப்பதற்கு சில நாட்கள்  முன்பு!!!! டேய் மூர்த்தி நீதான் இதுக்கு சரியானவன் 'ஹ்ம்ம் ஏறு கீழே குதிடா டேய்!! என்ன விட்டுடுங்கடா நாம ஏதோ சின்ன சின்ன திருட்டு பண்ணிட்டு இருந்தோம் ''கோவில நகை கொள்ளை அடிக்கிறது பாவம் டா'' நான் போக மாட்டேன் .. சே ''அப்படியே'' அரைஞ்சேன்னு வச்சிக்கோ மவனே கீழே  குதிச்சி ஓடி போய்டு''. மூர்த்தி காத்திருக்க சங்கரும் ரவியும் நகைகளை திருடி வந்து விட்டனர். பல கோடி மதிப்பிருக்கும் அந்த நகைகளுக்கு பின்னே!! நாவலூர் சிவன் கோயில் னா சும்மாவா ? மூர்த்தி பயத்தில் நடுங்க டேய் என்ன ...

இது காதல் விளையாடும் தெரு(சிறு கதை )

Image
வசந்த காலம் வந்துவிட்டதை குயில் கூவி தெரிவித்தது. வானம் மேக மூட்டத்துடன்  இருக்க, சூரியன்  பூமியில் பட அவசரபட்டு கொண்டிருந்தான். பிரவீன், டேய்... பிரவீன் !! எழுந்திருடா விடிஞ்சாச்சு!!. அம்மா குரல் கேட்டு கண்விழித்தான் பிரவீன். சோம்பல் முறித்து பிரஷ் யையும் பேஸ்டையும் எடுத்துகிட்டு வெளியே வந்தான். சூரிய  கதிர் கொஞ்சம் கொஞ்சமாக பூமியில் பிரசன்னமாகி கொண்டிருந்தது. சாலையில் சிறு சிறு சத்ததோடு மக்கள் நடமாடிகொண்டிருந்தனர். பேப்பர் போடும் சிறுவனின் சைக்கிள் பெல் சத்தம், இட்லி மாவு விற்பவரின் குரல், நடுவே வர்ஷா கல்லூரிக்கு போறதையும்  பார்த்தான். இந்த இடத்தில் ''வர்ஷா''வை பற்றி. "வானத்திலிருந்து விழுந்த நட்சத்திரம் போல் வர்ஷா அவ்ளோ அழகு". இன்னும் சினிமா காரர்கள் யாரும் பாக்கலை, பார்த்திருந்தால்... ''ஏலம் எடுத்து நடிக்க வச்சிருபாங்க வர்ஷாவை''. இரண்டு  பேரும் ஒரே ஏரியா என்பதால் அடிக்கடி சந்தித்து கொள்வார்கள். வர்ஷா தூரத்துல வந்தாலே நம்மாளு நண்பரை யாரும் பக்கத்துல சேர்க்காம  தனியா வருவான். ரெண்டு பேரும் ஓரக் கண்ணால பார்த்துட்டு போய்டுவாங...

மரணமும் அதற்க்கு மேலும் .......

Image
இங்க இறந்து கிடக்கிறது நான் தான் .நான் எப்பவும் போலத்தான் இருந்தேன் , ஆனா எல்லாரும் சொல்றாங்க நான் செத்துடேனாம். நான் சாகுற வரைக்கும் எனக்கு தெரியாது மரணம் எப்படி இருக்குமென்று , இறந்தவன் நான் சொல்றேன்  நீங்க தெரிஞ்சுகங்க! அது ஒரு மணம்,அமைதியான வெண்மை நிறம் , அதிக  ஒளி, சத்தமில்லாதது , கடலில் நீச்சல் அடித்துவிட்டு இரவில் தூங்கும் போது வரும் பிரம்மை போல் இருக்கும் , இல்லாத ராட்டினத்தில் சுற்றுவது போல.  எனக்கு தெரியாது இவ்வளவு சீக்கிரம் நான் இறப்பேன் என்று , என் கைபேசிக்கு புதுசா வந்திருந்த குறுந்தகவல் யாருடையது என்று கேட்கலாம் என பதில் அனுப்பி இருந்தேன்,  நீங்க யாரு?இன்னும் பதில் வரலை அவர்களிடமிருந்து , பதில் வந்தாலும் இனி என்னால அது யாரென்று  தெரிஞ்சிக்க முடியாது. நான் கிழே விழுந்து கிடக்கும் போது என் கைபேசியை எடுத்து  ஒருவர் எனக்கு தெரிந்தவரை  அழைக்க பார்த்தார், நானும் தான் அவர்க்கு உதவுனேன் அவர்க்கு அது காதில் விழலை,  அண்ணே ..அதுல நம்பர் ரெண்டை அழுத்தி கால் பட்டன் கொடுங்க என் அண்ணன் பேரை ஸ்பீட் டயல் வச்சிருக்கேன்!! இந்த ம...

கண்ணாடி நாட்கள் (சிறு கதை )

Image
ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தின் மேல் போய்கொண்டிருந்தது அந்த ரயில். ஜன்னலோரத்தில் சோகமாய் உட்கார்த்திருந்தான் செழியன். ஜன்னலுக்கு வெளியே வாணிபத்திற்காக சில கப்பல்கள் மிதந்து கொண்டிருந்தன. அவனுக்கு எதிரே ஒரு குடும்பமும் பயணித்து கொண்டிருந்தது. அவன் அருகில் இருந்த பெரியவர் ஒருவர் வாயில் வெற்றிலையை குதப்பியவாறே பேச ஆரம்பித்தார், "என்ன தம்பி! ரொம்ப சோகமா இருக்கீங்க!!," ஏதாவது பிரச்சனையா? சொல்லுங்க தம்பி''. எனக்கு சாமுத்திரிகா லக்ஷணம் தெரியும், உங்களைப் பார்த்தா பெருசா எதையோ இழந்த மாதிரி தெரியுது. அதான் கேட்டேன்.” மெல்ல பேச ஆரம்பித்தான் செழியன், "ஆமாங்கையா யாருக்கும் வராத பிரச்சனை எனக்கு வந்திருக்கு". ”என்ன தம்பி சொல்றீங்க...? என்னாச்சு கொஞ்சம் புரியுற மாதிரி சொல்லுங்களேன்.” இருக்கையில் கொஞ்சம் நிமிர்ந்து உட்கார ஆரம்பித்து,"என் பேரு செழியன், சென்னை தான் சொந்த ஊரு, நானும் யாழினியும் காதலிச்சி கல்யாணம் பண்ணிகிட்டோம். கோவிலை கடக்கும் போது எதேச்சையா  நம்ம கை நெஞ்சுக்கும் உதட்டுக்கும் போகும்ல அந்த மாதிரிதான் யாழினி கிட்ட எதேச்சையா என் காதலை சொன்னேன்” எ...

விட்டில் பூச்சி(சிறுகதை)

                                     அதிகாலை தென்னங்கீற்றுக்களின் இடைவெளியில் சூரியன் எட்டி பார்த்துகொண்டிருந்தான். கடிகாரத்தில் நேரம் சரியாய் 6.40யை கடந்திருந்தது.  "சரி... என்னப்பா? ஆளாளுக்கு ஒருத்தர் வாயை ஒருத்தர் பார்த்துகிட்டு இருக்கீங்க. சட்டு புட்டுன்னு ஆக வேண்டிய காரியத்தை பாருங்கப்பா!!" கூட்டத்தில் இருந்த முருகேசன் தன் கையில் வைத்திருந்த துண்டை உதறியவாரே சொல்லி முடித்தார்.  "அண்ணே! உங்களுக்கே தெரியும், மூத்த புள்ள நான் இப்படி குத்து கல்லுமாதிரி இருக்கும் போது என்னைய விட இளையவன் சுடலை அவனுக்கு சொத்துல அதிகமா எழுதி வச்சா என்ன அர்த்தம் ?" சத்தமாக சொல்லி முடித்தான் முத்தையா  "அது சரி... முத்தையா உங்க அப்பா நல்ல சிவம் ஊர்ல எவ்ளோ பெரிய மனுஷன், இப்ப அவர் இருக்குற நிலையில நீ இப்படி பேசுனா அவர் மனசு எவ்ளோ பாடுபடும்."  சுவரின் மூலையில் சோகமாக அமர்ந்திருந்தான் சுடலை. நல்ல சிவம் கட்டிலில் ...

இறந்தவன் பேசுகிறேன்

Image
                                       அத்தியாயம் -1 சென்னை, தாம்பரத்திலிருந்து செல்லும் ரயில் அது. புதியதாய் சேர்ந்த டிரைவர் ஒருவர் ஓட்டிச் சென்றார். இரவு வந்தது. ஒரு இடத்தில் வண்டியின் முன் புறத்தில், ஒரு பெண் உருவம் வண்டியை, ''நிறுத்துங்க ""நிறுத்துங்க" ன்னு கத்த, அலறிப் போய் இருக்கிறார் டிரைவர். பக்கத்துல இருந்த டிரைவர் "ஒண்ணும் பயப்படாதிங்க, இவங்க இந்த வண்டில அடிபட்டு செத்து போனவங்க. அடிக்கடி இந்த மாதிரி வருவாங்க. உங்களுக்கு கொஞ்ச நாள் ல பழகிடும்" ன்னு சொல்ல கதி கலங்கி போயிருக்கிறார்  அவர். டி கே எம் கல்லூரி ஆம்புலன்ஸ் சத்தத்தோடு வரவேற்றது. வேகமாக இறங்கிய ஸ்ட்ரச்சர், லைப்ரரியில் நுழைந்தது. அங்கு சதை கூழமாய் ரத்த வெள்ளத்தில் இருந்தார் பரந்தாமன். ரத்த திட்டுகள் உறைந்து, ஹீமோக்லோபின் காற்றில் கலந்து கறுப்பு நிறத்தில் இருந்தது ரத்தம். "என்ன நடந்தது? யார் பண்ணினாங்க?" விசாரிக்கத் தொடங்கினார் நந்தா. 'கிரிமினல் பீரோ' வை சேந்தவர். "ஏதோ க...

ரூ .6.50 பயணச்சீட்டு

நான் போகிற வண்டி திருவொற்றியூர் ல இருந்து அம்பத்தூர் போய் கிட்டு இருந்தது ''(34) டிக்கெட் எடுத்து நானும் ஜன்னலோர சீட்ல வழக்கம் போல அமர்ந்திருப்பேன் ,அதே நேரம் ,அதே பேருந்து என்பதனால் அதே இருக்கையும் கூட !!,பஸ்ல கூட்டம் அதிகமாகுற நேரத்துல யாராவது ''வயசானவங்க வந்தா அவங்களுக்கு!'' என் சீட்ட  கொடுத்துடுவேன் ,நான் கொஞ்ச நேரம் நின்னுகிட்டு வருவேன் ,எப்படியும் நான் இறங்குவதற்கு முன்னாடியே அவங்க இறங்கிடுவாங்க அதனால ..சில சமயம் திருவொற்றியூர் வரைக்கும் நின்னுகிட்டே வந்திருக்கேன் , போகும் போது இந்திரா சௌந்தரராஜன் அவர்கள் நாவல்தான் எனக்கு பொழுது போக்கே ஒரு நாளைக்கு ஒரு நாவல முடிச்சிடுவேன் ,போகும் போது பாதி ''அத்தியாயத்தையும் வரும் போது மீதி அத்தியாயத்தையும்'' ,நின்னு கிட்டு வரும் போது கொஞ்சம் கஷ்டம் தான் அத்தியாயமெல்லாம் . சில சமயம் சீட் ,கிடைச்சும் டிரைவர் ,கண்டக்டர் வர நேரம் ஆகும் பொழுது ,பஸ்சுக்குள்ள பாப்கார்ன் ,வேருகடலை,வியாபாரம் லாம் நடக்கும் ,  ''வேருகல்லேய்ய்..''ன்னு ராகமா  இழுக்கும் போது ஒரு மாதிரியா இருக்கும்.சில சம...

பொம்மைகள் இல்லாத உலகம்...!

பொம்மைகள்... ஒண்ணு சிரிச்சிட்டு இருக்கும். இல்லைனா வெச்ச இடத்துல இருந்து அசையாம இருக்கும். மழை, வெயில், காத்து எதப் பத்தியும் கவலைப்படாது....! சின்ன வயசுல பொம்மைகள் பத்தி  அப்படிஒண்ணும்   ஆர்வம் இருக்கல.  ஆனா, வயசு அதிகமானப்புறம் தான் தெரிஞ்சது பொம்மைகள் இல்லாத உலகத்தில் நம்மால வாழமுடியாதுன்னு. அக்காவும், தங்கையும் மரப்பாச்சி  பொம்மைகளோட தான் தங்களோட சின்ன வயச கழிச்சாங்க.  அது எங்கம்மா விளையாடுன பொம்மையாம். பின்னாளில தங்களோட பிள்ளைகளுக்கு சீதனமா கொடுத்தாலும் ஆச்சர்யப் படமுடியாது. இன்னிக்கு நகரத்துல பொம்மைகள் இல்லாத வீடுகளும் சரி, பொம்மைகளை விற்காத கடைகளும் சரி இல்லைன்னு சொல்ல முடியாது. பொம்மைகள் அந்த அளவிற்கு தன்னோட சுட்டு விரலை நம்மை நோக்கி நீட்டி இருக்கு  போல. தலை உடைஞ்சுபோன ஒரு புத்தர் பொம்மையோட வீட்டுக்கு வந்த தம்பி அது ஒரு அதிசய பொருளாகவே ரொம்ப நாளுக்கு வெச்சிருந்தான். அவனுக்கு வெவரம் தெரிஞ்சப்ப சிரிக்கும் புத்தர் சிலையை அதிஷ்டத்திர்கான அறிகுறியாய் மாறிபோயிருந்ததை அப்பாவும், அம்மாவும் ஏத்துகிட்டு இருந்தாங்க .. சிங்கப்பூரில் ...