அமன்யா -சிறுகதை
அந்த தார் சாலையின் ஓரத்தில் இருந்த மின்விளக்குகளில் சில எடிசனுக்கு நன்றி சொல்லி கொண்டும்
ஒரு சிலவிளக்குகள் அப்பகுதி மின்வாரிய ஊழியர்களிடம் கோபித்து கொண்டும் இருந்தன ..''
ஆரஞ்சு வண்ணத்தை சாலை முழுவதும் படர விட்டிருந்த அவை எல்லாம் நேரம் மாலை ஏழு மணி
என்பதை தெளிவாய் காட்டியது ..
கதிர்க்கு வெள்ளைகாரங்க வகுத்த மர்பி விதிகள் ங்கற துரதிஷ்டம் நிழல் போல கூடவே இருக்கும் ,பஸ்
ஸ்டான்ட் ல நின்னா எதிர் பக்கத்துல பஸ் வரதும் ,அந்த பக்கம் நின்னா இந்த பக்கம் பஸ் வரதும்
பழகிடுச்சி ,அதனால் தான் கடன் வாங்கி இந்த பல்சர வாங்கி இருக்கான் அதுவும் போகும் போது ஒழுங்கா
போயிட்டு வீட்டுக்கு வரும் போது பஞ்சர் ஆகிடுச்சி ..அத ஓரம் கட்டிட்டு தான் வீட்டுக்குள்ள வந்தான் கதிர் .
வழக்கம் போல அம்மா லட்சுமி காபி போட்டு கொடுக்க அதை குடிச்சிட்டு ரெஸ்ட் எடுத்துகிட்டான்.
(கதிர் சென்னைல இந்துஜா குரூப் ங்கற கம்பெனி ல புதுசா ஜாயின் பண்ணி இருக்கான் )
பொழுது போக்குனு எதுவும் இல்லை இவனுக்கு ..ஆனா தினமும் காலைல எட்டரை மணிக்கு இவன் லவ்
பண்றதா நினைச்சிகிட்டு இருக்குற அந்த அமன்யா பொண்ணுதான் எல்லாம் அமன்யா கூட சேர்ந்து டூயட்
பாடுறதே இவன் கனவு .இந்த இடத்தில் ''அமன்யா வை பற்றி நல்ல உயரம்.கலரும் ஜாஸ்திதான்
கதிரோட பார்த்தா ,
கதிரோட பார்த்தா ,
இன்ஜினியரிங் காலேஜ் ல கடைசி வருஷம் படிச்சிக்கிட்டு இருக்காங்க .
கதிர் தினமும் காலை அந்த வண்டிய தள்ளிகிட்டே கொஞ்ச தூரம் அமன்யா பின்னாடியே போயிட்டு அவ
லேசா மொரைச்ச உடன் போய்டுவான் ..இது இவனுக்கு பழகிடுச்சி ..அமன்யாவும் அவன் போன உடன்
லேசா ஒரு சிரிப்பு சிரிப்பா அழகா இருக்கும் அந்த சிரிப்பு .
அன்னைக்கு சாயந்தரம் கொஞ்ச மழை கதிர் சீக்கிரமா வீட்டுக்கு வந்துட்டான் அப்படியே தன்னோட போன
கைல எடுத்துகிட்டு மாடிக்கு வந்தவன் .
கல்லூரி முடிச்சிட்டு வந்துகிட்டு இருந்த அமன்யா மழைல நனையாம இருக்க தன்னோட துப்பட்டாவ
தலைமேல பிடிச்சிகிட்டு போறத கதிர் பார்க்க.அழகா இருந்தது அது .அப்படியே கொஞ்ச நேரம் கனவு காண
ஆரம்பிச்சிட்டான் ..
படி இறங்கி வந்து ஒரு நிமிஷம் அமன்யா நான் உங்க கிட்ட பேசணும் ப்ளீஸ் நில்லுங்க!!''
யார் நீங்க? என்ன பேசணும் என் கிட்ட!!'' நான் வீட்டுக்கு போகணும் நகருங்க!!' ..ப்ளீஸ் ஒரு நிமிஷம் ன்னு
அவன் இத்தனை நாளை பேசி பழகிருந்த வசனம் போல .நான் உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்
நான் உங்கள லவ் பண்றேங்க ..ரொம்ப நாளா ''நான் சொல்றது சினிமா வசனம் போல இருக்கும் ..ஆனா
இதுதான் உண்மை'' சோ சே எஸ் ஆர் நோ''மேலிருந்து மழைத்துளி ஒன்று கதிர் மீது பட்டு தெறிக்க
மீண்டும் 'நினைவுக்கு வந்தான் ..ச்சே!இதுவும் கனவுதானா ன்னு நொந்துகொண்டான் .அமன்யா அவனை
கடந்து போய்விட்டிருந்தாள் .
மறுநாள் காலை வழக்கம் போல் கதிர் காத்திருக்க,அமன்யா வரவே இல்லை ஏமாற்றத்துடன் அங்கிருந்து
புறப்பட்டான் .நாளைக்கு எப்படியாவது நம்ம காதலை சொல்லணும் ன்னு சொல்லிகிட்டே தன் கைபேசிய
எடுத்து பாட்டு கேட்டுகிட்டே வண்டி ஓட்ட ஆரம்பிச்சான் .
அமன்யா ஊருக்கு கிளம்பிகிட்டு இருந்தா! ம்மா நான் வரலன்னு சொல்றேன்''!! ஏம்மா? இப்படி
பண்றீங்கன்னு ''?
அவ அம்மாகிட்ட சண்டை போட்டுகிட்டே துணிய மடிச்சி சூட் கேஸ் ல வச்சிக்கிட்டு இருந்தா ''
கதிர் செக்யுரிட்டி அருகில் சென்று நான் கிளம்புறேன் பாய் !!''சொல்லி
தன்னோட வண்டிய ஒரு ஒதை ஒதச்சிட்டு வீட்டுக்கு வந்துகொண்டு இருந்தான்.
முன்னாடி பையில ஸ்வீட் பாக்ஸ் ஒண்ணு இருக்க .அமன்யா வை பத்தி நினைச்சிகிட்டே வந்துகிட்டு
இருந்தான் ..ஒரு திரும்பும் முனைல
ஒரு கண்டைனர் லாரி பின்னாடியே மெதுவா கதிர் போக''
அந்த வண்டிய முந்தி போக இன்னொரு கண்டைனர் வண்டி வர 'அது பலமா ''கதிர் வண்டில மோத
அப்படியே ஒரு சுத்தி சுத்தி முன்னாடி போய்கிட்டு இருந்த வண்டிக்கு சக்கரத்தில கதிர் விழ ..பின் பக்க
சக்கரம் முழுவதும் கதிர் மீது ஏறி இறங்கியது .கொஞ்ச தூரம் இழுத்துகிட்டு போக ....டிரைவர் வண்டிய
நிறுத்திக்கிட்டு ஓட ஆரம்பிச்சிட்டான் .
கொஞ்ச நேரம் அந்த பக்கம் போய்கிட்டு இருந்தவங்க காது செவிடான மாதிரி ஒரு வித அமைதி ...சில
நொடிகளுக்குள் அனைவரும் சத்தம் போட
லேசா உயிர் இருந்தது கதிருக்கு ..ஆம்புலன்ஸ் வரதுக்குள்ள'' உயிர் சென்று விட்டிருந்தது அவனிடம்
இருந்து ...''
இழுத்து வர பட்ட சாலை முழுவதும் கதிரின் எலும்பு மஜ்ஜையின் கீறல்கள் ..பக்கத்தில் சிதறி கிடந்த
இனிப்பு பெட்டி ..அதன் மேல் ஈக்கள் கூட்டம் அவனுடைய குருதிமீதும் ..அந்த இனிப்புகளின் மீதும்
மாறி மாறி மொய்த்துகொண்டிருந்தன..
அமன்யாவின் வீட்டு நாட்காட்டியின் ஐந்து நாட்கள் குப்பை கூடையில் கிடந்தது ...
மறுபடியும் கல்லூரிக்கு கிளம்பும் போது கதிர் வீட்டை கடந்து விட்டாள். அமன்யா '
திரும்பி திரும்பி பார்த்தவள் கதிர் வராததை கண்டு சிறு ஏமாற்றத்துடன் திரும்ப முனைகையில்''
அந்த தெரு முனையில் தண்ணீர் தொட்டியின் மேல் கதிரின் ''கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ''கண்ணில் பட அதிர்ந்துவிட்டாள் அமன்யா!!'' சில நொடிகள் ஆகின அவளை அவள் சுதாரித்து கொள்ள..கதிரோடு சேர்ந்து
அவன் காதலும் காற்றில் கலந்து விட்டிருந்தது ..
மிகப்பெரிய யுகத்தின் அணு துகள்களாய் நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன '''
அந்த போஸ்டரில் இருந்த'' இரண்டு கண்கள் மட்டும் சில நாட்கள்
அழுதுகொண்டே இருந்தன ''...அவனின் காதலை சொல்லாத கண்களோடு .......
முற்றும் -
பா ;சண்முகம்

Comments